×

மாவட்டத்தில் பரவலாக மழை

ஈரோடு, ஆக. 31: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில் 16 மிமீ பதிவானது. கோடைகாலம் முடிவடைந்து, தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கிய பின்னரும், ஈரோடு மாவட்டத்தில் போதிய மழையின்றி வறண்ட வானிலையே நிலவி வந்தது. இதனால், கோடை காலத்தை போலவே 100 டிகிரிக்கு மேலாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில், கடந்த 22ம் தேதி ஈரோட்டில் மட்டும் 35 மிமீ மழை பெய்தது. இதனால் கடுமையான வெப்பத்தில் இருந்து மக்கள் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையை அனுபவித்தனர். தொடர்ந்து, மீண்டும் கடந்த 4 நாட்களாக வெயிலின் தாக்கம் மிக அதிக அளவில் இருந்து வந்தது.இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 7.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. மிதமாக பெய்யத்தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான கால நிலை நிலவியது. அதேபோல மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. மொத்தம் 64.80 மிமீ. மழை பெய்தது. அதிகபட்சமாக சென்னிமலையில் 16 மிமீ பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழையின் அளவு (மிமீ) வருமாறு: ஈரோடு -2, பவானி -3, பெருந்துறை -1, கொடுமுடி – 8.20, மொடக்குறிச்சி – 13, அம்மாபேட்டை – 9.60, குண்டேரிப்பள்ளம்- 12. இதேபோல் நேற்று மாலையும் சுமார் 40 நிமிடம் மழை பெய்தது.

The post மாவட்டத்தில் பரவலாக மழை appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Chennimalai.… ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டத்தில் யானையைக் கொன்று, தந்தத்தை வெட்டி சென்ற நபர் கைது